search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீன மாணவி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கும் தருணம் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியை அளிப்பது உண்மை.
    • இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்த சீன மாணவி சென் யினிங் பட்டமளிப்பு விழாவில் நடந்து கொண்ட விதம் உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

    படித்தவர்களின் வீடுகளுக்கு செல்லும் போது அங்கு தலையில் குல்லா வைத்து கையில் சுருட்டிய சான்றிதழுடன் காட்சி அளிக்கும் புகைப்படங்களை கட்டாயம் பார்க்கலாம்.

    வீட்டுக்கு வந்தவர்கள் அந்த படம் குறித்து கேட்டால் அவர்கள் கல்லூரி நாட்களை பற்றியும், படித்து முடித்து பட்டம் வாங்கிய தருணம் குறித்தும் மணிக்கணக்காக பேசதொடங்கி விடுவார்கள்.

    அந்த அளவுக்கு மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்களில் பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கும் தருணம் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியை அளிப்பது உண்மை.

    அந்த வகையில் இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்த சீன மாணவி சென் யினிங் பட்டமளிப்பு விழாவில் நடந்து கொண்ட விதம் உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

    விழா மேடையில் பட்டம் வாங்க மாணவிகள் பலரும் வரிசையில் நின்றனர். சீன மாணவி சென் யினிங் பட்டம் வாங்க செல்லும் நேரம் வந்த போது அவர் திடீரென விழா மேடையில் குங்பூ ஸ்டைலில் குட்டிக்கரணம் அடித்தார்.

    பட்டம் வழங்க இருந்த கல்வியாளர்கள் இதனை கண்டு ஆச்சரியமடைந்தனர். அதோடு அவர்கள் சீன மாணவி சென் யினிங்குக்கு சிரித்தபடி பட்டத்தை வழங்கினர்.

    இந்த காட்சிகளை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றவர்கள் செல்போனில் பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பல லட்சம் லைக்குகளை அள்ளியது. வீடியோ காட்சிகளை பார்த்து சீன மாணவியை ஏராளமானோர் பாராட்டி வருகிறார்கள்.

    சீனாவில் பள்ளி மாணவி வேகமாக சென்று கொண்டிருந்த கார் சன்னலில் அமர்ந்து மேற்கூரையில் நோட் வைத்து எழுதிக்கொண்டே பயணம் செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. #HomeWork #Chinataxi
    பீஜிங்:

    சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி கடந்த வாரம் டேக்சி மீது அமர்ந்து படித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி காரின் ஜன்னல் மீது அமர்ந்து மேற்கூரையில் நோட் வைத்து எழுதிக்கொண்டிருந்தார். இதனை பின்னால் வந்த காரில் இருந்த நபர் வீடியோ எடுத்து இணையதளங்களில் பதிவேற்றம் செய்தார்.

    வேகமாக செல்லும் காருக்கு வெளியே அமர்ந்து மாணவி பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காருக்கு அருகில் பேருந்து மற்றும் பல வாகனங்கள் வந்த போதும் மாணவி அமர்ந்திருந்தார். இதனை கண்ட காரை ஓட்டிய மாணவியின் தந்தை அவரை உள்ளே இழுத்தார். ஆனால் மாணவியை கவனிக்காமல் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அவரின் ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.

    இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. மாணவியின் தந்தை டாக்சி ஓட்டக்கூடாது என டாக்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. #HomeWork #Chinataxi

    ×